திருவண்ணாமலை || கார் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி.!
four peoples died for accident in thiruvannamalai
திருவண்ணாமலை அருகே நேற்று இரவு கார்- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே நள்ளிரவு 3:30 மணிக்கு காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
four peoples died for accident in thiruvannamalai