மதுரையில் சோகம் - பாலம் அமைக்கும் போது சாரம் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் ரூ. 190 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பாலம் ஸ்டேஷன் சாலையில் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இதனை முன்னிட்டு கட்டுமானப் பணிகளுக்காக இரும்பு சாரம் அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இணைப்பு பாலத்துக்காக அமைக்கப்பட்ட சாரம் பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு பணியாற்றி வந்த 4 ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ஓடி வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அங்கு வர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட இரும்பு சாரம் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples injured for saram collapsed in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->