மேலும் 4 மீனவர்கள் கைது! இலங்கை கடற்படையினர் அட்டூழியம்! - Seithipunal
Seithipunal


எல்லைதாண்டி மீன்பிடித்ததாக நான்கு தமிழக மீனவர்களை இலங்கை கடற்பறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் கோட்டைபட்டினம் பகுதியில் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.

இதேபோல் வழக்கம்போல் நேற்று முன்தினம் ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 550 விசைப்படகுகள் மூலம் 600கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

இதில் ஜெகதா பட்டினம் பகுதியைச் சேர்ந்த வீரன் என்பவருக்கு சொந்தமான படகுவில் அதே பகுதியை சேர்ந்த கணேசன், சேரன், பரமசிவம், பாலமுருகன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் சுமார் 32 நாடுகள் தொலைவில் நெடுஞ்தீவு  பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு ரோந்துக்கு வந்த இலங்கை கடற்படை மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களை எல்லாம் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.

மேலும் விசைப்படைகளில் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four Tamil Nadu fishermen arrested for cross border fishing by Sri Lankan marines


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->