சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள சிண்டிகேட் வங்கியில், சட்ட விரோத பணபரிவர்த்தனை நடப்பதாக, கடந்த 2016ல் அந்த வங்கியில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த ஆர்.கே.அல்ரேஜா, மத்திய விஜிலென்ஸ்கமிஷனுக்கு புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்.,12 முதல் நவ.,29 வரையிலான காலகட்டத்தில், அடையாளம் மற்றும் முகவரியை மறைத்து, போலி நிறுவனங்கள் பெயரில் நடப்பு கணக்கு துவக்கி, பல நாடுகளில் இருந்து, 3,500 கோடி ரூபாய் வரை, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சென்னை பாரிமுனையை சேர்ந்த முகமது பெரோஸ், ஹாரூன் ரஷீத், லியாகத் அலி உள்ளிட்டோருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும்அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் ஹாரூன் ரஷீத்துக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆறு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, கடந்தாண்டு பிப்ரவரி 16ல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மன்னிப்பு கோரி, முகமது பெரோஸ் தாக்கல் செய்த மனுவை, சிறப்பு நீதிமன்றம் ஏற்றது.

மற்றொருவரான லியாகத் அலி மீதான வழக்கு, சென்னை சி.பி.ஐ., 12வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர்வாண்டினா முன்பு நடைபெற்று வந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. 

ஆகவே, குற்றவாளிக்கு சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four years prison for ullegal upi transection in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->