மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மோசடி! 2 பேர் கைது!
Fraud by claiming to treat a mentally challenged child 2 arrested
மயிலாடுதுறை மாவட்டம் அருகே 2 நபர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, பண மோசடி செய்து தலைமறைவு.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் அருகே புத்தமங்கலம் மாரியம்மன் கோவில் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு ஒரு மகள் ரூபஸ்ரீ(9) உள்ளார். இவரின் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இதனை தெரிந்து கொண்ட 2 நபர்கள் ஆந்திராவை சேர்ந்த தம்பதி ராஜசேகர் மற்றும் ரேணுகா தேவியை அணுகி இவர்களிடம், உங்கள் மகளை 6 மாதத்தில் குணமாக்கிவிடுவோம், நல்ல சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
பிறகு, தம்பதியிடம் மகளின் சிகிச்சைக்காக ரூ.84 ஆயிரம் பணத்தைப் பெற்று கொண்டதோடு அந்த இரு நபர்களும் தலைமறைவாகினர். ஏமாற்றியதை அறிந்த ராஜசேகர் மணல்மேடு காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாகிய அந்த இருவரையும் நேற்று புதுக்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்த மஞ்சுநாதன் (42), சன்னப்பா மகன் அன்னப்பா (44) கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட அவர்களை மயிலாடுதுறை மாவட்டம் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை நடத்தி விட்டு, பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
English Summary
Fraud by claiming to treat a mentally challenged child 2 arrested