எந்த வித குழப்பமும் இல்லாமல் உடனடியாக இலவச அரிசி வழங்கவேண்டும்.. ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!
Free rice should be provided immediately without any confusion. Om Shakti Shekhar urges!
நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு எந்த வித குழப்பமும் இல்லாமல் உடனடியாக இலவச அரிசி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமை பொருள் வழங்கும் துறை இயக்குனருக்கு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் கோரிக்கை மனு அளித்தார்.
புதுச்சேரி அரசு சார்பில் சிகப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும் மஞ்சள் அட்டை வைத்துள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசியும் இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது.நெல்லித்தோப்பு தொகுதி மக்களுக்கு எந்த வித குழப்பமும் இல்லாமல் உடனடியாக இலவச அரிசி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமை பொருள் வழங்கும் துறை இயக்குனருக்கு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் கோரிக்கை மனு அளித்தார்.
அப்போது அந்த மனுவில் கூறியிருப்பது: கடந்த தீபாவளி முதல் அரிசி வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த முறை அரிசி வழங்கிய போது அரிசி வழங்கும் இடங்கள் முறையாக தெரிவிக்க படாமல் நெல்லி தோப்பு தொகுதி மக்கள் அல்லல் படும் சூழல் ஏற்பட்டது.
இரண்டு மூன்று கடைகள் ஒன்றாக சேர்த்து வழங்கப்பட்டதால் மக்களிடையே பல்வேறு குழப்பம் ஏற்பட்டது.
இந்த முறை சிகப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும் மஞ்சள் அட்டை வைத்துள்ளவர்களுக்கு 10 கிலோ அரிசியும் தற்போது பல்வேறு தொகுதிகளில் வழங்கப்பட்டு வருவதை பத்திரிகைகள் மூலம் அறிகிறோம். ஆனால் நெல்லித்தோப்பு தொகுதியில் இதுவரை இலவச அரிசி வழங்குவதற்கான அறிகுறிகள் தெரியாத சூழல் உள்ளது.
மேலும் கடந்த முறை நடந்தது போன்று குழப்பம் இல்லாமல் தெளிவாக எங்கெங்கு ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது என்பதை மக்களுக்கு முறையாக தெரியப்படுத்தி விரைந்து இலவச அரிசி வழங்க துறை இயக்குனர் என்ற முறையில் நீங்கள் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு.ஓம்சக்தி சேகர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Free rice should be provided immediately without any confusion. Om Shakti Shekhar urges!