கிருஷ்ணகிரி : ராயக்கோட்டை ரயில்நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து.!
Freight train derail in rayakottai krishnagiri
கிருஷ்ணகிரி : ராயக்கோட்டை ரயில்நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து.!
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம், தர்மபுரி வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்றுள்ளது. இதையடுத்து இந்த ரெயில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது ரெயிலில் இருந்து திடீரென ஆறு பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைத்த பயணிகள் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த ரயில்நிலையம் வழியாக செல்லும், சேலம்- யஸ்வந்த்பூர் விரைவு ரயில், தர்மபுரி- பெங்களூரு ரயில், பெங்களூரு - ஜோலார்பேட்டை விரைவு ரயில் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், சில ரெயில்கள் தர்மபுரி ஓசூருக்கு பதிலாக ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் வழியே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்த மீட்பு பணிகளுக்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Freight train derail in rayakottai krishnagiri