கணேசமூர்த்தி தற்கொலைக்கு 'எம்.பி சீட்' தான் காரணமா? வைகோ விளக்கம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு அளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மை அல்ல என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

ம.தி.மு.க மூத்த நிர்வாகியும் ஈரோடு மக்களவை உறுப்பினருமான கணேசமூர்த்தி கடந்த 24ஆம் தேதி தற்கொலைக்கு முயன்ற நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்து விட்டார். 

இந்நிலையில் கணேசமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக வைகோ கோவை விமான நிலையம் சென்ற போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, கணேசமூர்த்தியிடம் சட்டமன்ற தேர்தலில் விருப்பப்பட்ட தொகுதி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

நானும் கணேசமூர்த்தியும் 50 வருடங்களாக பழகி இருக்கிறோம். கொள்கையும் லட்சியம் பெரிது என வாழ்ந்தவர். ஆனால் கடந்த சில நாட்களாக மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக என்னிடம் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தார்கள். 

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டிய கணேசமூர்த்தி இந்த முடிவிற்கு வருவார் என கனவில் கூட நினைக்கவில்லை. 

மேலும் அவர் மருந்து குடித்து தற்கொலை செய்ததற்கு எம்.பி. சீட் கிடைக்காதது தான் காரணம் என்பது உண்மை அல்ல. இதனை நான் ஒரு சதவீதம் கூட ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganesh Murthy suicide issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->