குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. சமீபத்தில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் மறுபடியும் அவர் மீது குண்டர்  சட்டம் போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் குண்டர் சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் மனுதாரரின் உதவியுடன் ரூ. 3.30 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதால் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.

வழக்கு விசாரித்த நீதிபதிகள் குண்டர்  சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் தனிநபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gangster Act cannot be allowed to be applied universally Madras High Court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->