சென்னையில் குப்பைகள் சேகரிக்கப்படும் நேரம் மற்றும் வாகனங்கள் விவரம்! இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி அறிவிப்பு.!
Garbage gathering details in website
குப்பைகள் சேகரிக்கும் நேரம் மற்றும் வாகனங்களின் விவரங்களை இணைய தளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியின் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் தெருக்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் குறித்த விவரங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம்-1 முதல் 15 வரை நாள்தோறும் சராசரியாக சுமார் 5100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகிறது. நாள்தோறும் சேகரமாகின்ற குப்பையை அகற்றுவதற்காக 358 கனரக / இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் மற்றும் 3725 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் அன்றாடம் தூய்மைப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய 5 மண்டலங்களில் மாநகராட்சியின் சார்பில் நேரடியாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த 5 மண்டலங்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்க பயன்படுத்தப்படும்
பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் (BOV) நிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மண்டலம், வார்டு, வாகனத்தின் ID எண், அதன் Trip எண், நேரம் மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் தெருக்களின் பெயர்கள் அடங்கிய விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் தெருக்களில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் அதன் நேரம் குறித்த விவரங்களை மாநகராட்சியின்
https://chennaicorporation.gov.in/gcc/bov_route/
இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Garbage gathering details in website