#BREAKING || வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு...!
gas cylinder price for commercial use has come down
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டாம் தேதி 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.171 குறைந்து, ரூ.2,021.50க்கு விற்கப்பட்டது. இந்தநிலையில் தற்பொழுது, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.84.50 குறைந்துள்ளது. விலை குறைந்ததையடுத்து சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ₨1,118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
gas cylinder price for commercial use has come down