கோவையை பரபரப்பாகிய கனமழை!! சுவர் இடிந்து விழுந்ததில் லாரியில் எரிவாயு கசிவு.!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் தனியார் எரிவாயு நிறுவனத்திற்கு கேரளாவில் இருந்து எரிவாய் கொண்டு வந்த லாரி நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழையின் காரணமாக அங்கிருந்த சுற்றுச்சுவர் ஒன்று இடிந்து எரிவாயு நிரப்பப்பட்ட லாரியின் மீது விழுந்துள்ளது. 

இந்த விபத்தில் லாரியில் உள்ள எரிவாயு திறக்கும் வால்வுகள் உடைந்ததால் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த எரிவாயு நிறுவன ஊழியர்கள் கசிவை நிறுத்த விரைந்தனர். மேலும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர்.

லாரியை சுற்றி சுமார் 500 மீட்டருக்கு தீக்குச்சி, செல்போன், டார்ச் லைட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என கோவை போலீசார் அறிவுறுத்தி கண்காணித்தும் வருகின்றனர். மேலும் கேரளா செல்லும் பிரதான சாலையான பாலக்காடு சாலையில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

தற்போது எரிவாயு நிரப்பப்பட்ட லாரியில் இருந்த இரண்டு வால்வுகள் அடைக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வால்வு சீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gas leak in truck due to wall collapse in Coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->