செஞ்சி மற்றும் வேப்பூரில் 11 கோடிக்கு விற்பனையான ஆடுகள்! மகிழ்ச்சியில் விவசாயிகள்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம்: செஞ்சி வெள்ளிக்கிழமை நடைபெறும் வரசந்தையில் சுற்று வட்டார பகுதிகளான சேலம், தர்மபுரி, வேலூர், ஆம்பூர் மற்றும் புதுவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடுகளை வியாபாரிகள் வாங்கி செல்வார்கள். 

வருகின்ற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி வாரசந்தையில் ஆடுகள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் விற்பனையாளர்கள் அதிக லாபத்துடன் தங்களது ஆடுகளை விற்பனை செய்தனர்.

செஞ்சி வார சந்தைக்கு பெங்களூரு, சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய வந்துள்ளனர். 

அதே போல, ஏராளமானோர் ஆடுகளை விற்பனைக்கு கிராமப்பகுதிகளிருந்து கொண்டு வந்தனர். இதனால், ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விலைபோனது. 

இந்த வார சந்தையில் மட்டும் சுமார் ரூ. 6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகி இருக்கலாம் என உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர். 

அதே போல, கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும். அதன் படி இன்று நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  இந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gingee and veppur 11crore goats sales


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->