வீட்டில் தனியே இருந்த சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


வீட்டில் தனியாக இருந்த நான்கு வயது சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கரையான் சாவடியில் அடுக்குமாடி குடியிருப்பில் ரவி என்பவர் தனது மனைவி சிந்தியா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வழக்கம் போல ரவி அவரது மனைவி மகன் நடைபயிற்சி கொண்டிருந்தனர். வீடு திரும்பும் போது மகள் மயக்கம் அடைந்து இருந்துள்ளார் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறை அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்தது தெரிய வந்தது.   சம்பவதன்று, சிறுமி தூங்கி கொண்டிருந்த போது பெற்றோர் நடைபயிற்சிக்கு சென்றுள்ளனர்.

அப்போது தூக்கல் எழுந்த சிறுமி யாரும் இல்லாததால் அழுதுள்ளார். மேலும், வீட்டின் பின் பகுதியில் உள்ள கதவை திறந்து பால்கனி வழியாக வந்து அங்கிருந்த சேரின் மீது நின்று சத்தம் போட்டு அழுதுள்ளார். அப்போது திடீரென நிலை தடுமாறி ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.  அந்த வழியாக வந்த காவலாளி சிறுமி கீழே படுத்திருப்பதை கண்டு சிறுமியை மீட்டபோது, சிறுமி மயக்கமாக இருப்பதாக கூறி வீட்டில் ஒப்படைத்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl Child death in Thiruvallur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->