புதிய பத்திர எழுத்தர் மற்றும் பத்திர விற்பனையாளர்களை நியமிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு புதிதாக பத்திர எழுத்தர் மற்றும் பத்திர விற்பனையாளர்களை நியமிக்க வேண்டும் என் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நில ஆவணங்கள் உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்புடைய பணிகளை மேற்கொள்வோர் தமிழக ஆவண எழுத்தர் சட்டத்தின்படி, முறைப்படி உரிமம் பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் பத்திர பதிவு எழுத்தர் மற்றும் பத்திர விற்பனையாளருகான அனுமதி வழங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது.

பத்திர பதிவு எழுத்தர் மற்றும் பத்திர விற்பனையாளர்கள் உரிமை பெற்றிருந்தவர்கள் தற்போது பலர் இறந்துவிட்டனர். அந்த இடங்கள் இதுவரை நிரப்பப்படாமல் இருக்கின்றன. புதிதாக இதுவரை எந்த புதிய அறிவிப்பும் வரவில்லை. இந்த வேலைக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

தற்போது பல இடங்களில் பத்திர பதிவு எழுத்தர் மற்றும் விற்பனையாளர்களும் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே படித்து வேலை இல்லாமல் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முகமாக புதிதாக பத்திரப்பதிவு எழுத்தர்கள் மற்றும் பத்திர விற்பனையாளர்களை உருவாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை உடனடி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan statement on New document writers appointment


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->