தமிழக மீனவர்கள் கைது! ஜி.கே.வாசன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கயில்,

மத்திய அரசு தமிழக மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை இலங்கை அரசிடம் கண்டிப்போடு தெரிவித்து, மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நேற்று ராமேஸ்வரம் மற்று மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 16 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இதனால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

அதாவது நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவர்கள், இரணைத்தீவு அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்கள் என மொத்தம் 16 மீனவர்களை கைது செய்து, மீனவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ள இலங்கை கடற்படையினரின் அராஜகத்தால் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

மத்திய அரசு - அண்டை நாடான இலங்கைக்கு பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வரும் வேளையில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், சிறைப்பிடிப்பு, படகுகளை பறிமுதல் செய்வது ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் இலங்கை அரசோடு பேசி, இது பொன்ற செயல் இனியும் தொடரக்கூடாது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்த விசைப்படகுகளை ஒப்படைக்கவும் மத்திய அரசு – இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் எவ்வித பாதிப்புக்கும் உட்படாமல் தொடர மத்திய அரசு ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து, செயல்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GKVasan statement on TN Ficherman issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->