தருமபுரி : தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை.!  - Seithipunal
Seithipunal


தர்மபுரி கோட்டத்தின் அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:- "தர்மபுரி அஞ்சல் கோட்டத்தில், நாளை மறுநாள் முதல் வருகிற 10-ந் தேதி வரை தலைமை தபால் நிலையங்கள் மற்றும் 30 துணை தபால் நிலையங்களில் தங்க பத்திரங்கள் விற்பனை நடைபெற உள்ளது.

ஒரு நபர் ஒரு கிராம் முதல் நான்கு கிலோ வரை தங்க பத்திரங்கள் வாங்கலாம். இதன் முதலீட்டு காலம் எட்டு ஆண்டுகளாகும். அதன் முடிவில் இந்த பத்திரத்தை அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் பணமாக மாற்றிக்கொள்ளலாம். தேவைப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முடிந்த பிறகு பணமாக மாற்றிக்கொள்ளலாம். 

இந்த பத்திரத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீதம் வட்டி கணக்கிட்டு, ஆறு மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இந்த வட்டி தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும். 

தங்க பத்திரத்தில் பணம் செலுத்துபவருக்கு முதலில் அஞ்சலக ரசீது வழங்கப்பட்டு, 15 நாட்களுக்கு பின்னர் தங்க பத்திரம் வழங்கப்படும். இந்த தங்க பத்திரம் வாங்குவதற்கு முதலீடு செய்பவரின் ஆதார் எண், பான் எண் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவை மிகவும் அவசியம். 

அதுமட்டுமல்லாமல், இந்த தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் சேமிக்கலாம். என்று அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold bond sale in dharmapuri post offices


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->