ஐஸ் எந்திரத்தில் தங்கம் கடத்தல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு.!
gold seized in trichy airport
தமிழகத்தில் உள்ள இரண்டாவது சர்வதேச விமான நிலையமான திருச்சி விமான நிலையத்திற்கு துபாய் நாட்டில் உள்ள சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் இருந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தனியே அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அந்த நபர் தனது உடைமையில் வைத்திருந்த ஐஸ் உடைக்கும் எந்திரத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.
உடனே அதிகாரிகள் அந்த எந்திரத்தை உடைத்து பார்த்ததில் 1.39 கிலோ எடை கொண்ட ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
gold seized in trichy airport