குளிக்கும் வீடியோ விற்பனை.. மகா கும்பமேளாவில் நடந்த அதிர்ச்சி.. ஒருவர் கைது!
Sale of bathing videos. Shock at Maha Kumbh One person has been arrested!
உத்தர பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. அப்போது கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.
இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அப்போது டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது தெரியவந்தது .


இந்நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றிய அமித் குமார் ஜா (27) என்பவரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அமித் குமார் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
English Summary
Sale of bathing videos. Shock at Maha Kumbh One person has been arrested!