6 வயது சிறு பாலியல் வன்கொடுமை.. தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் கம்பம் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே க.புதுப்பட்டியை சேர்ந்தவர் தேங்காய் வெட்டும் கூலித்தொழிலாளி 45 வயதானவர் சுருளிவேல். இவர் கடந்த 2023-ம் ஆண்டு இவர் ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த துயரத்தை தெரிவித்தாள்.

இதுகுறித்து சிறுமியின் தாய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுருளிவேலை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான முதன்மை சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் ரஷீதா ஆஜராகி வாதாடினார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவில், சுருளிவேலுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கணேசன் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட சுருளிவேலை போலீசார் பலத்த காவலுடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Six-year-old child sexually assaulted. Worker sentenced to 25 years in prison


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->