அடுத்தடுத்து போதைப்பொருள் கடத்தல்..திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!
Drug trafficking . . . Drugs worth Rs 24 crore seized in Tripura
திரிபுரா கோவாய் மாவட்டத்தில் உள்ள தெலியாமுராவில் சிமெண்ட் பைகளை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் மறைத்து வைத்திருந்த ரூ. 9 கோடி மதிப்புள்ள 90,000 யாபா மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திரிபுராவின் கோவாய் மற்றும் தலாய் மாவட்டங்களில் போதைப்பொருள் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து அதன்பேரில் பாதுகாப்புப் படையினர், அசாம் ரைபிள்ஸ் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் கூட்டுக் குழு வியாழக்கிழமை கோவாய் மாவட்டத்தில் உள்ள தெலியாமுராவில் சிமெண்ட் பைகளை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து சோதனை செய்தது. அப்போது அதில் மறைத்து வைத்திருந்த ரூ. 9 கோடி மதிப்புள்ள 90,000 யாபா மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பின்னர் இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல நேற்று தலாய மாவட்டத்தில் சதாப்தி எக்ஸ்பிரசில் கைவிடப்பட்ட 2 பைகளில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள 1,50,000 யாபா மாத்திரைகளை அசாம் ரைபிள்ஸ் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த போதை பொருட்களை மியான்மரில் இருந்து மணிப்பூர் மற்றும் மிசோரம் வழியாக இந்த மாத்திரைகள் திரிபுராவிற்குள் நுழைவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Drug trafficking . . . Drugs worth Rs 24 crore seized in Tripura