குப்பையில் கிடந்த முதியவர் - அரசு மருத்துவமனை ஊழியர்கள் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். யார் என்ற அடையாளம் தெரியாத அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அவரை தேடி யாரும் வரவில்லை.

இதனால், மருத்துவமனை ஊழியர்கள் அந்த முதியவரை இன்று காலை வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து, வீல் சேர் மூலம் கொண்டு சென்று, மருத்துவமனை பிணவறை காம்பவுண்ட் சுவர் அருகே உள்ள குப்பையில் படுக்க வைத்துவிட்டு சென்றனர். 

அங்கு அந்த முதியவர் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்துள்ளார். மேலும், அவரைச் சுற்றி நின்று நாய்கள், குரைத்துக் கொண்டிருந்துள்ளன. இந்த சத்தம் கேட்ட பொதுமக்கள் அப்பகுதிக்குச் சென்ற போது குப்பையில் முதியவர் ஒருவர் ஈக்கள் மொய்த்தபடி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக, மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முதியவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் அந்த முதியவரை தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காகத் திருப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government hospital employees left old man in dharapuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->