அரசு மருத்துவமனை கழிவறையில் மூதாட்டி பலி! போலீசார் விசாரணை!
government hospital toilet Old woman died
திண்டுக்கல், மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 58). கடந்த சில நாட்களாக துரைராஜ் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது.
இவருக்கு உதவியாக மருத்துவமனையில் லட்சுமி தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்று லட்சுமி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவ ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது லட்சுமி சுயநினைவின்றி கீழே விழுந்து கிடந்தார்.
அவரை மீட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லட்சுமி உயிரிழந்து விட்டார்.
அரசு மருத்துவமனை கழிவறையில் மூதாட்டி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
government hospital toilet Old woman died