#BREAKING :: ஆளுநருக்கு கொலை மிரட்டல்... திமுகவுக்கு புதிய நெருக்கடி... நீதிமன்றத்தை நாடியது ஆளுநர் மாளிகை..!! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த விருகம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநர் ரவி குறித்து அவதூறாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை உண்டாக்கியது. இதனை அடுத்து தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது மத்திய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆளுநரை அவதூறாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சார்பாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக் கூடிய விரைவில் விசாரணைக்கு வர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்காததால் தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor House pursues defamation case against DMK speaker


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->