கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதற்கு காரணம்? குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!
governor house thrown petrol bombs reason
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் என்ன என்பது குறித்து கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது , ''சிறையிலிருந்து விடுதலையாகி வந்த பின் நாம் யாரையும் சந்திக்கவில்லை.
சிறையில் இருக்கும் போது நீட் தேர்வு தொடர்பான தற்கொலை செய்திகளை படித்து மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டது. எனது மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
அவரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நீட் தேர்வு இருந்தால் எனது மகனின் மருத்துவ கனவு பறிபோகும்.
இதனால் தான் நான் பெட்ரோல் குண்டு வீசினேன். தனக்கும் பிஎப்ஐ அமைப்பினருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
மேலும், சிறையில் 10 வருடங்களுக்கு மேல் இருப்பவர்களை உடனடியாக விடுவிக்க ஆளுநர் கையொப்பம் இட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
English Summary
governor house thrown petrol bombs reason