தமிழக மக்களுக்கு முக்கிய செய்தி ஒன்றை விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாட்டை சேர்ந்த என் அன்பான சகோதர, சகோதரிகள். கோவிட் தொற்று நோய் இன்னமும் இங்கே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். 

பொதுமக்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர். சிலர் இறந்தும் உள்ளனர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதே பாதுகாப்பு ஆகும். 

இந்தியா முழுவதும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் 200 கோடி அளவிலான தடுப்பூசி செலுத்தும் பணி கடந்து உள்ளது. 

தொடரும் கோவிட் தொற்றை கருத்தில் கொண்டு, நமது பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட இந்திய அரசு, 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஏராளமான சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் நமது இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நினைவாக 75 நாட்கள் நடைபெறுகிறது. 

என் அன்பான சகோதர, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." 

இவ்வாறு அந்த அறிக்கையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor RN Ravi announcement for vaccine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->