முதலமைச்சருக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆளுநர்.!
governor rn ravi birthday wish to cm mk stalin
தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்து இருப்பதாவது, தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நந்நாளில் தங்களை வாழ்த்துத்துகிறேன் என்று தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்தியுள்ளார்.
English Summary
governor rn ravi birthday wish to cm mk stalin