அரியலூர் ரயில் பயணியிடம் 77 லட்சம்!!! சிக்கிய இளைஞர்! ஹவாலா பணமா?
Ariyalur train passenger caught with 77 lakhs Youth caught hawala money
சென்னை அரியலூர் ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு இறங்கிய பயணியிடம் ரூ. 77 லட்சம் ரொக்கப் பணம் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக 77 லட்சம் இருந்ததைக் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை பெரம்பலூரைச் சேர்ந்த வினோத்குமார் சோளம் விற்ற பணத்தை எடுத்து வருவதாக போலீசாரிடம் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இதனை சந்தேகத்தின் பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எடுத்து வந்தது ஹவாலா பணமா?என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சோளம் வித்து எப்படி ரூ.77 லட்சம் சம்பாதிக்க முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த இளைஞர் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருந்ததால் இதுபோன்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Ariyalur train passenger caught with 77 lakhs Youth caught hawala money