அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கும் மாதம் ரூ.2000..பொள்ளாச்சி ஜெயராமன் சொல்கிறார்!   - Seithipunal
Seithipunal


இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்றும்  மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும்என  பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

திருப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும் என கூறினார்.

மேலும் இன்று மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்து விட்டது என்றும்  பாதாள சாக்கடை வரி 129 சதவீதம் உயர்ந்துவிட்டது என்றும்  நாய், பூனை வளர்த்தாலும் பூனை குட்டி போட்டாலும் வரி போடுகிறார்கள் என ஆளும் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ,கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை என்றும்  ஆனால் இன்று வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு விலைவாசியும் உயர்ந்து விட்டது என கூறினார்.

மேலும் தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்றும்  மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After the formation of the AIADMK government, women will get Rs 2000 per month. Pollachi Jayaraman says!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->