போலி பேராசிரியர்கள் ஆப்பு! அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கேட்ட ஆளுநர்!
governor sought a report from Anna University on the issue of fake professors scam
போலி பேராசிரியர்கள் மோசடி விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கீகாரம் பெறுவதற்காக கல்லூரிகளில் முறைகேடாக பல பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக அறப்போர் இயக்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் புகார் அளித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு கல்லுரிகளில் பணிகளில் போலியாக பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்தநிலையில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு நிகழ்வு ஆண்டில் மட்டும் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல்வேறு கல்லூரிகளில் பதிவு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது குறித்து ஆளுநர் ரவி பொறியியல் கல்லூரிகள் போலியாக பேராசிரியர்கள் பணி புரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோசடி விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடி யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என ஆளுநர் அறிக்கையாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
governor sought a report from Anna University on the issue of fake professors scam