கழிவு நீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்கள் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


கழிவு நீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட ஊழியர்கள் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!

சென்னையில் உள்ள கிண்டியில் சக்கரபாணி சாலையில் சேசுராஜ் சாண்டியாகோ என்பவர் தொழிலாளர் சட்ட ஆலோசனை அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் தலைமை அலுவலகத்தில் தனது வீட்டிற்கு கழிவு நீர் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். 

இதற்கு உரிய கட்டணம் செலுத்தப்பட்ட போதும் களப்பணியாளர்கள் ஜான் மற்றும் செல்லத்துரை உள்ளிட்ட இருவரும் கழிவு நீர் இணைப்பு வழங்க ரூ 16 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால், சேசுராஜ் சாண்டியாகோ லஞ்சம் தர மறுத்துள்ளார். இதனால் களப்பணியாளர்கள் இருவரும் கழிவு நீர் பணியை பாதியிலேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். 

இதையடுத்து சேசுராஜ், லஞ்ச ஒழிப்பு போலீஸாரை அனுகி அவர்களின் ஆலோசனைப்படி ஜான் மற்றும் செல்லத்துரை உள்ளிட்டோரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது, அங்கு  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மணிமேகலை முன்னிலையில் நடைபெற்றதில் களப்பணியாளர்கள் இருவரும் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து நீதிபதி இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ 2 ஆயிரம் வீதம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt employers arrested for bribe in chennai gindy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->