கனமழை எதிரொலி - 4 மாவட்டங்களில் பொது விடுமுறை.!
govt holiday in four districts for rain
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி நான்கு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும், அதிலும் ஓரிரு இடங்களில் அதி கனமழை வரையிலும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் மிதமான மழையும், இதுதவிர தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று மட்டும் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று (டிசம்பர் 18ஆம் தேதி) பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
govt holiday in four districts for rain