ரூ.1500 லஞ்சம் வாங்கிய அதிகாரியை.. சினிமா பாணியில் பொறிவைத்து பிடித்த போலிஸ்.!
govt officer pyaari begam arrested in chengalpet
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்ணாங்குப்பட்டு என்ற கிராமத்தில் மதியழகி என்பவர் வசித்து வந்துள்ளார். தமிழக அரசு கொடுக்கும் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு ரூபாய் 25 ஆயிரம் விதம் இரண்டு குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் வேண்டுமென்று விண்ணப்பித்து இருந்தார்.
இந்த விண்ணப்பத்தை பரிந்துரை செய்யும் சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஊர் நல அலுவலர் பியாரி பேகம் என்ற பெண் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்த பணத்தை மதியழகி தர மறுத்ததால் அவரது மனுவை பரிந்துரை செய்யாமல் மறுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மதியழகி அவர் மீது லஞ்ச ஒழிப்பு புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறை சூப்பிரண்டு இமானுவேல் ஞானசேகர் தலைமையில் ரசாயனம் தடவிய ரூபாய் 1500 ரூபாய் நோட்டை கொடுத்து அனுப்பி அதை பியாரி பேகம் வாங்கும் பொழுது மறைந்திருந்து கையில் களவுமாக பிடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் மீது போலீசார் லஞ்ச ஒழிப்பு வழக்கை பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
govt officer pyaari begam arrested in chengalpet