பண்டிகை காலங்களிலும் ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும்!

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் "பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் அதிகளவில் உயர்த்துவது வாடிக்கையாக உள்ளது.

பண்டிகை நாட்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருக்கும் சூழ்நிலையில் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.2000 ,மதுரை வரை ரூ.2500, கோவை செல்ல ரூ.2700 திருநெல்வேலிக்கு ரூ.3000, நாகர்கோயில் செல்ல ரூ.4000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் பண்டிகைக்கு ஓரிரு நாட்கள் முன்பு மேலும் உயரக்கூடும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பண்டிகை காலங்களில் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் மேலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt should run extra buses during festivals and holidays


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->