தமிழகமே... இன்று முதல் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்வு - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லி எம்.சாண்ட் விலைகளை உயர்த்தப் போவதாக கல் குவாரி உரிமையாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி ஜல்லி, வெட்மிக்ஸ், எம்சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஜல்லி வெட்மிக்ஸ் யூனிட்டுக்கு 3000 மற்றும் 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து கட்டணம் ரூ. 1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்சாண்ட் யூனிட்டுக்கு நான்காயிரம் மற்றும் 10 கி.மீ போக்குவரத்து கட்டணம் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று அனைத்து கனிமவள பொருட்களுக்கும் யூனிட்டுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என தமிழ்நாடு கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. 

இந்த விலை உயர்வானது இன்று முதல் தமிழக முழுவதும் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே வரி உயர்வால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது கட்டுமான பொருட்களும் விலை உயர்வை கண்டிருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gravel msand price hike today onwards in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->