மாட்டுக்கறி புகைப்படம்... வருத்தம் தெரிவித்த தமிழக காவல்துறை.! - Seithipunal
Seithipunal


மாட்டுகறி புகைப்படத்திற்கு சென்னை காவல்துறையினர்  பதிவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதிக அளவு மக்களால் உபயோகிக்கப்படும் சமூகவலைதளத்தில் டிவிட்டர் வலைதளமும் ஒன்று. சாதாரண மக்கள் முதல் அரசியக் கட்சியினர், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்னை காவல்துறையினர் பின்னுட்டம் ஒன்று நெட்டிசன்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

நாம்தமிழர் கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்த ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மாட்டுகறி புகைபட்டத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள @Chennaipolice இந்த பதிவு தேவையற்றது என்றும் இதுபோன்ற பதிவுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளது.  அந்த புகைப்படத்தில் அவர் யாரையும் டேக் செய்யும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

இதனை கண்ட நெட்டிசன்கள் சென்னை காவல்துறையினருக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் எனவும் ஒருவரை எந்த உணவு சாப்பிட கூடாது என யாரும் கட்டாயபடுத்த கூடாது எனவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கடும் கண்டனங்கள் எழுந்த பின் அந்த பின்னுட்டத்தை காவல்துறை நீக்கியுள்ளது. இதற்கிடையில் காவல்துறையினர் இந்த மாதிரியான பதிவுகளை தவிர்க்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்தும் அந்த பதிவை நீக்கிய சென்னை காவல்துறையினர் அந்த விளக்கம் அளித்ததோடு வருத்தம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Greater Chennai Police apologies for thier Comment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->