சேலம் :: சோதனையில் சிக்கிய 32 கிலோ புகையிலை பொருட்கள்.! மளிகை கடை உரிமையாளர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் 32 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடை உரிமையாளரை கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மல்லூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அம்மன் நகர் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்ததில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 32 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளரான மதன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மதன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்,  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grocery store owner arrested for 32 kg of tobacco products seized in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->