உயிரை குடித்த ஆன்லைன் வர்த்தகம்! ரூ 30 லட்சத்தை இழப்பு! கடைசியாக எழுதிய லெட்டர்! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ 30 லட்சத்தை இழந்ததால் மளிகை கடை வியாபாரி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்தவன் நவ நீத கிருஷ்ணன். அவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது அவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நவ  நீத கிருஷ்ணன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்த அனைத்து பணமும் இழந்ததுடன் கடனாளியான  நவநீதகிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மனவேதனையில் இருந்த கிருஷ்ணன் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதம் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற சேலையூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர் எழுதிய கடிதத்தில் எழுதி இருப்பதாவது, ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.30 லட்சம் வரை இருந்து கடன் பிரச்சனைகள் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grocery store trader commits suicide after losing Rs 30 lakh in online trading


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->