திண்டிவனம் அருகே 30 அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! தமிழ் ஆசிரியர் கைது! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த திருவக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த நிலையில், அப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மகளை மீட்ட பெற்றோர்கள், தற்கொலைக்கு கரணம் என்று விசாரணை செய்யவே, "வகுப்பறையில் புத்தகத்துக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாச வீடியோவை பார்க்குமாறு தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் (வயது 38) தொல்லை அளித்ததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக மாணவி தெரிவித்துள்ளார்.

மேலும் சில மாணவிகளுக்கும் மகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மாணவி தெரிவிக்கவே, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். 

மேலும், ஆவேசமடைந்த மாணவிகளின் உறவினர்கள், தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை சரமாரியாக தாக்கி, வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் மகேஸ்வரன், பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச்சென்று, மாணவிகளுக்கு மகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கோட்டக்குப்பம் போலீசார் ஆசிரியர் மகேஸ்வரனை போக்சோவில் கைது செய்தனர். இதற்கிடையே  தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணி நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Harassment Case Teacher Suspended Dindivanam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->