பள்ளியில் நுழைவதை தடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியை !!
headmistress was denied entry to the school
தமிழகம் முழுவதும் கடந்த 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
49 வயதான பர்வததேவி , குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஆர்எம்வி நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருகிறார், இவர் தமிழக அரசின் கடந்த 2023-24ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றவர்.
கடந்த திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பர்வததேவியை பள்ளி வளாகத்திற்குள் நுழைய கரெஸ்பாண்டென்ட் ராஜன் (53) அனுமதிக்க வில்லை, ராஜன் முன் கேட்டை பூட்டிவிட்டு, பள்ளியின் பின்னால் உள்ள கேட் வழியாக மாணவர்களை உள்ளே வர வைத்தார். அங்கு கொளுத்தும் வெயிலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாசல் முன் காத்து கொண்டிருந்த தேவி வெயிலின் தாக்கத்தால் மயங்கி கீழே விழுந்தார்.
தலைமை ஆசிரியருக்கும் பள்ளி கரெஸ்பாண்டென்ட்க்கும் இடையிலான தனிப்பட்ட பகையின் விளைவாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ராஜன் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான 12 சென்ட் நிலத்தை விற்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை தேவி, பள்ளிக் கல்வித்துறையிடம் இந்த சம்பவத்தை குறித்து புகார் அளித்துள்ளார், இதனால் அவர்களுக்கு இடையே பகை ஏற்பட்டு உள்ளது.
இதனால் கரெஸ்பாண்டென்ட் ராஜன் தன்னைப் பற்றி வாட்ஸ்அப்பில் பொய்யான தகவல்களைப் எல்லோர்க்கும் அனுப்புவதாகவும், பள்ளிக்குள் நுழைவதற்கு 30 லட்சம் ரூபாய் தருமாறும் கேட்டதாகவும் பர்வத தேவி போலீசில் புகார் கூறியுள்ளார். 1914 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த நடுநிலைப்பள்ளியில் 110க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
headmistress was denied entry to the school