தமிழ்நாட்டில் கனமழை எதிர்பார்ப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை
Heavy rain expected in Tamil Nadu Orange alert
தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியில் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று அந்தத் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. எனினும், வானிலை ஆய்வு மையம் இன்று, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது. இதில், 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை சாத்தியமானதால், 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும் எனவும், அதனால் 2 நாட்கள் ஆஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Heavy rain expected in Tamil Nadu Orange alert