வினாத்தாள் வழங்குவதில் தாமதம் - ஆத்திரத்தில் அத்துமீறிய மாணவர்களால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் ஒருங்கிணைந்த முதன்மை போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 945 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதினர்.

இந்த நிலையில் பாட்னா தேர்வு மையத்தில் தேர்வு நடந்துகொண்டிருந்தபோது வினாத்தாள் தருவதில் 40 முதல் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதால் பொறுமையிழந்த மாணவர்கள் ஆசிரியர்களை மீறி வினாத்தாளின் சீல் வைக்கப்பட்ட பெட்டியை சோதனை செய்து அதிலுள்ள வினாத்தாள்களை எடுத்து கிழித்தெறிந்துள்ளனர்.

மேலும், ஏராளமானவர்கள் வினாத்தாள்களைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர். பின்னர் தங்கள் அறையில், சீல் வைக்கப்பட்ட பெட்டியை ஏன் திறக்கவில்லை என்று ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினர்.

மாணவர்களின் சத்தம் கேட்டு மற்ற அறைகளில் இருந்த மாணவர்களும் வெளியே வந்து கையேடுகள் மற்றும் வருகைப் பதிவேட்டை பறித்து கிழிக்கத் தொடங்கினர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students protest out of exam hall in bihar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->