குளு குளுவென மாறிய வெயில் நகரம்.. வேலூரில் 2வது நாளாக கன மழை - Seithipunal
Seithipunal


வெயில் நகரம் என்று அழைக்கப்படும் வேலூரில் கடந்த சில நாட்களாக சராசரியாக 105 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி விதைத்து வந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் 110.7 டிகிரியாகவும் நேற்று 110.5 டிகிரயகவும் வெப்பநிலை பதிவானது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

வேலூர் மாவட்டத்தில் மே மாதம் தொடக்கத்தில் கோடை மழை பெய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கோடை மழை பெய்யுமா என எதிர்பார்த்து காத்திருந்த வேலூர் மக்களுக்கு நேற்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. 

குறிப்பாக குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கீழ் ஆலத்தூர், பலமநேர், ஆம்பூர், பள்ளிகொண்டா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று தான் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். 

இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெப்பம் தணிந்து நிம்மதி அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain falled in Vellore on 2nd day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->