சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது ஹாய் நன்னா.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹாய் நான்னா'. மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைத்தார்.

வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் 'ஹாய் டாட்' என்ற பெயரில் உலக முழுவதும் வெளியானது.

அதன் பின்னர் 'ஹாய் நான்னா' திரைப்படம் ஜனவரி 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ.72 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதால், நானி நடித்து வெளியான படங்களில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாகும். முதல் இடத்தில் அதே வருடம் வெளியான தசரா ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், 'ஹாய் நான்னா' திரைப்படம், ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் அவர்களின் மார்ச் பதிப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hi nanna movie on best movie award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->