அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து; உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு! - Seithipunal
Seithipunal


அரசு வேலைவாய்ப்பில் முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2016-ல் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின்கீழ் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள 70 சதவீத இடங்களிலும் பெண்கள் போட்டியிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் முதலில் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் 30 சதவீத பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கி விட்டு, இதன்பின் சமுதாய ரீதியிலான இடஒதுக்கீட்டை பின்பற்றுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

இந்த நடைமுறைப்படி ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேசமயம் தகுதி அடிப்படையில் பணிநியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது.

எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அரசு வேலைவாய்ப்பில், முதலில் பொதுப்பிரிவையும், பிறகு சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த உத்தரவுக்கு ஏற்ப எதிர்காலத்தில் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு அறிவுறுத்தி வழக்குகளை முடித்து வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High Court new order women regarding reservation seats TNPSC exams


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->