''எல்லோருக்கும் உயர்தர மருத்துவம்''; முதலமைச்சர் மு,க.ஸ்டாலின்..!
High quality healthcare for everyone Chief Minister MK Stalin
குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கூட்டுறவுத் துறை சார்பில் 500 கடைகளும், தொழில் முனைவோர்களுக்கு 500 கடைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முதல்வர் மருந்தகம் ஏசி வசதியுடன் அமைக்கபட்டுள்ளதோடு, இந்த மருந்தகங்களில் ஜெனரிக் மருந்துகள், சர்ஜிக்கல்ஸ் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் உயர்தர மருத்துவம் என்ற இலக்கில்..
மக்களைத் தேடி மருத்துவம்
இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48
இதயம் காப்போம்
பாதம் பாதுகாப்போம்
போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக, குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைத்திடவும்; B.Pharm., D.Pharm., முடித்தவர்களைத் தொழில் முனைவோர்களாக வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு முழுக்க 1000 #முதல்வர்மருந்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
High quality healthcare for everyone Chief Minister MK Stalin