உயர்கல்வி ஊக்கமாக திராவிட மாடல் ஆட்சி - முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் தான் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா இன்று, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. 

இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கைகளால், சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற 762 பேர் பட்டம் பெற்றனர்.  

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கையில், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உட்பட பல தலைசிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை உள்ளது. 

இந்த பல்கலைக்கழகத்தில் தான் தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா படித்தார். இன்று முதல்வராக உங்கள் முன் உரையாற்றும் நானும் இதே பல்கலைக்கழகத்தை சார்ந்தவன் தான். 

இந்த நிகழ்ச்சியிலே அந்த வகையில் உங்கள் சீனியராகவும் நான் கலந்து கொண்டுள்ளேன். சென்னைப் பல்கலைக்கழகம் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல், இந்தியாவின் நவீன வளர்ச்சிக்கு கடந்த 165 ஆண்டுகளாக பங்களிப்பைச் வழங்கி வருகிறது. 

சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும்தான் அந்தக் காலத்தில் இருந்தது. பின்னர் நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில சென்னைக்கு வெளியே சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 

இன்றைய தினத்தில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் உள்ளன. இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதை அறிவோம்.

பள்ளிக் கல்வியை வளர்த்தார் பெருந்தலைவர் காமராசர். கல்லூரிக் கல்வியை விரிவுபடுத்தினர் கலைஞர். இன்று உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறது நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

higher education incentive DMK regime Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->