#தமிழகம் || இந்து மகாசபா மாநில தலைவரை கைது செய்த போலீசார்.!
hindu maha sabha state head arrested
மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மகாசபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அடுத்துள்ள காப்புக்காட்டில் இந்து மகா சபா நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த சபாவின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய வகையில் பல விஷயங்களைப் பேசினார்.
குறிப்பாக மத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக, தக்கலை கணேசன் என்பவர் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின் பேரில் பாலசுப்ரமணியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை பாலசுப்ரமணியன் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை மடக்கிய போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவதை அறிந்த இந்து மகா சபா நிர்வாகிகள் தங்களது கண்டனக் குரலை எழுப்பினர்.
இதனையடுத்து போலீசார் பாலசுப்ரமணியனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
hindu maha sabha state head arrested