அரசு அனுமதியின்றி பட்டாசு பதுக்கல்: கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்!
hoarding firecrackers without government permission 2 people arrested
தமிழ்நாடு-கர்நாடகா எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டு 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
அரசு விதிகளை மீறி பட்டாசுகளைப் பதுக்கி விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாக எச்சரிக்கை விடுத்தது.
மேலும் அதிகாரிகள் மற்றும் போலீசார் மாவட்டத்தில் யாராவது அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்கிறார்கள் என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஓசூர் சிப்காட் அருகே அரசு அனுமதியின்றி 85 அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததற்காக அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் அதே பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட போது தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 32 அட்டை பெட்டிகளில் பட்டாசுகளை அரசு அனுமதி இன்றி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் வெங்கட் விஜயன் (வயது 28) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
English Summary
hoarding firecrackers without government permission 2 people arrested