தேனியில் பரபரப்பு : நரிக்குறவ மக்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த கேரள முதியவர் மீது தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


தேனியில் பரபரப்பு : நரிக்குறவ மக்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த கேரள முதியவர் மீது தாக்குதல்.!

நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் சித்திக். இவர் ஏர்வாடிக்கு செல்வதற்காக தேனி வழியாக வந்துள்ளார். அப்போது, சித்திக் தேனி பேருந்து நிலையத்தில் இறங்கி உணவு உண்பதற்காக ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருந்த நரிக்குறவ பெண்கள் மற்றும் சிறுவர்கள் சித்திக்கிடம் பிச்சை கேட்டுள்ளனர். இதற்கு மறுப்புத் தெரிவித்த சித்திக், அவர்களை ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுங்கள் நான் பணம் தருகிறேன் என்று கூறி அவர்களை சாப்பிட வைத்துள்ளார். 

இதைப்பார்த்து மேலும் இரண்டு பேர் சாப்பிட வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு உணவு கொடுக்க முடியாது என்று ஹோட்டல் ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து, அவர்களை வேறு ஹோட்டலுக்கு கூட்டி செல்லுமாறு தெரிவித்துள்ளனர். உடனே அந்த சிறுவர்கள் சித்திக்கிடம் உணவு வாங்கி தருமாறு ஹோட்டல் முன்பு நின்றவாறு கெஞ்சியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் சிலர் திடீரென சித்திக் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயம் அடைந்த சித்திக் பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர்.

நரிக்குறவர் இன சிறுவர்களை ஹோட்டலில் உணவு உண்ண வைத்த கேரள மாநிலத்தவரை ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தேனியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hotel employers attack old man in theni for bought food to foxes peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->